இந்தியா

உத்தராகண்ட் மாநில முதலமைச்சராக பதவியேற்றார் புஷ்கர் சிங் தாமி

உத்தராகண்ட் மாநில முதலமைச்சராக பதவியேற்றார் புஷ்கர் சிங் தாமி

Sinekadhara

உத்தராகண்ட் மாநிலத்தின் புதிய முதலமைச்சராக புஷ்கர் சிங் தாமி பதவியேற்றார்.

பாஜக ஆளும் அம்மாநிலத்தில் 4 ஆண்டுகளாக முதலமைச்சராக இருந்த திரிவேந்திர சிங் ராவத் பதவி விலகியதையடுத்து, கடந்த மார்ச் மாதம் மக்களவை எம்.பி.யான தீரத் சிங் ராவத் முதல்வராக பதவியேற்றார். அவருக்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், ஆளுநர் பேபி ராணி மவுரியாவை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை நேற்று முன்தினம் அளித்தார்.

இந்நிலையில் டேராடூனில் மத்திய பார்வையாளர் நரேந்திர சிங் தோமர் முன்னிலையில் நேற்று மாலை நடைபெற்ற பாஜக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில், புஷ்கர் சிங் தாமி கட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து அவர் ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார்.

தற்போது ஆளுநர் பேபி ராணி மௌரியா பதவிப் பிரமாணம் செய்துவைக்க புஷ்கர் சிங் தாமி உத்தராகண்ட் மாநிலத்தின் புதிய முதல்வராக பதவியேற்றார்.