பெட்ரோல் விலையில் 10 ரூபாய் மற்றும் டீசல் விலையில் 5 ரூபாய் குறைக்க பஞ்சாப் மாநில அரசு முடிவு செய்துள்ளது.
இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டிருக்கும் பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி, “இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் வகையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை முறையே லிட்டருக்கு 10 மற்றும் 5 ரூபாய் குறைக்க முடிவு செய்துள்ளோம்” என தெரிவித்தார்.
சில நாட்களுக்கு முன்பு மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைத்தது. இதனைத்தொடர்ந்து, பல மாநில அரசுகளும் பெட்ரோல், டீசல் மீதான தங்கள் மாநில அரசின் வரியை குறைத்து வருகின்றன.