இந்தியா

பஞ்சாப் சட்டசபை தேர்தல் - முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது ஆம் ஆத்மி கட்சி

பஞ்சாப் சட்டசபை தேர்தல் - முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது ஆம் ஆத்மி கட்சி

rabiyas

பஞ்சாப் மாநிலத்திற்கான சட்டப்பேரவைத் தேர்தல் அடுத்தாண்டு தொடக்கத்தில் நடைபெற்றவுள்ளது. இதனையொட்டி 10 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை ஆம் ஆத்மி கட்சி வெளியிட்டுள்ளது. இந்த 10 வேட்பாளர்களும் தற்போது சட்டமன்ற உறுப்பினர்களாக உள்ளனர்.

இதில் ஆம் ஆத்மி கட்சியின் சட்டமன்ற கட்சித் தலைவர் ஹர்பால் சிங் சீமா திர்பா தொகுதியிலும், துணைத் தலைவர் சரவ்ஜித் மனுகே ஜாக்ரோன் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர். முதல்முறையாக தேர்தலில் நின்று வெற்றி பெற்ற 10 சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் மீண்டும் வாய்ப்பு வழங்கியுள்ளது ஆம் ஆத்மி கட்சி. 

கடந்த புதன்கிழமை (நவம்பர் 10) பதிண்டா தொகுதியின் எம்எல்ஏவாக உள்ள ருபிந்தர் கவுர் ரூபி ஆம் ஆத்மி கட்சியில் விலகி, காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். இதனைதொடர்ந்து ராய்காட் தொகுதி ஆம் ஆத்மி எம்எல்ஏ ஜக்தார் சிங் ஜக்கா ஹிசோவால் தாம் காங்கிரஸ் கட்சியில் இணைவதாக, அம்மாநில சட்டப்பேரவையில் முதல்வர் சரண்ஜித் சன்னியிடம் நேரடி ஒப்புதல் அளித்தார். பின்னர் மறுப்பு தெரிவித்துவிட்டார் ஜக்தார் சிங் ஜக்கா ஹிசோவால். தற்போது பஞ்சாப் சட்டசபையில் 12 ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்கள் உள்ளனர்.