பஞ்சாப் மாநில சட்டப்பேரவைத் தேர்தலை தள்ளி வைப்பது குறித்து இந்திய தலைமை தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்தி வருகிறது.
குரு ரவிதாஸ் ஜெயந்தியை ஒட்டி பஞ்சாப் மாநிலத்தில் பெருவாரியான மக்கள் உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசி புனித பயணம் மேற்கொள்வார்கள் என்பதால் தேர்தலை சில நாட்களுக்கு ஒத்திவைக்க வேண்டும் என பஞ்சாப் மாநில முதல்வர் சரண்சித் சிங் சன்னி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியிருந்தனர்.
தேர்தல் அறிவிப்பதற்கு முன்பாகவே இந்த விவகாரம் குறித்து விவாதிக்கப்பட்டதாகவும் எனினும் தற்போது பெரும்பாலான அரசியல் கட்சிகள் தேர்தலை ஒத்திவைக்க கோரிக்கை வைத்திருப்பது குறித்து ஆலோசிக்க இருப்பதாகவும் இந்திய தலைமை தேர்தல் ஆணைய அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
117 தொகுதிகளைக் கொண்ட பஞ்சாப் மாநிலத்திற்கு பிப்ரவரி 14ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என ஏற்கனவே இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. பிப்ரவரி 16 ஆம் நாள் ரவிதாஸ் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது.
இதையும் படிக்க: குடியரசு தின விழா அணிவகுப்பில் அலங்கார ஊர்திக்கு அனுமதி மறுப்பு: மே.வங்கம், கேரளா கண்டனம்