இந்தியா

’சிறப்பு புலனாய்வு குழு அமைப்பு’: ரெய்னாவுக்கு ஆறுதல் சொன்ன பஞ்சாப் முதல்வர்

’சிறப்பு புலனாய்வு குழு அமைப்பு’: ரெய்னாவுக்கு ஆறுதல் சொன்ன பஞ்சாப் முதல்வர்

EllusamyKarthik

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னாவின் அத்தை குடும்பத்தினர் பஞ்சாப் மாநிலம் பதன்கோட்டில் அவர்களது வீட்டில் தூங்கி கொண்டிருந்த போது கொள்ளையர்களால் கொடூரமாக தாக்கப்பட்டனர். 

இந்த தாக்குதலில் ரெய்னாவின் மாமாவும், அத்தையின் மகனும் உயிரிழந்த நிலையில் ரெய்னாவின் அத்தை உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 

ஐ.பி.எல் தொடரிலிருந்து விலகியுள்ள ரெய்னா துபாயிலிருந்து இந்தியா திரும்பியதும் ‘இந்த தாக்குதல் சம்பவத்தின் உண்மையை அறிய முறையான விசாரணை வேண்டும்’ என வலியுறுத்தியிருந்தார். 

இந்நிலையில் சுரேஷ் ரெய்னாவுக்கு ஆறுதல் கொடுக்கும் வகையில் முறையான விசாரணைக்கு உத்தவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார் பஞ்சாப் மாநில முதல்வர் கேப்டன் அமரிந்தர் சிங்.

‘உங்களது உறவினர்கள் மீதான கொடூர தாக்குதலை நான் வன்மையாக கண்டிக்கிறேன். பதன்கோட்டில் நடந்த தாக்குதல் சம்பவத்தில் தொடர்புள்ள குற்றவாளிகளை விரைவாக அடையாளம் கண்டு கைது செய்ய சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து விசாரிக்க உத்தரவிட்டுள்ளேன். பாதிக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்களை காவல் துறை உயர் அதிகாரிகள் சந்தித்துள்ளனர்’ என ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.