மனோரமா முகநூல்
இந்தியா

“துப்பாக்கி காட்டி மிரட்டினார்”-சர்ச்சையில் சிக்கிய பயிற்சி பெண் IAS அதிகாரி பூஜா கேட்கரின் பெற்றோர்

மகாராஷ்டிர மாநிலத்தில் பயிற்சி பெண் ஐஏஎஸ் அதிகாரி பூஜா கேட்கர். பயிற்சியின்போது அதிகாரத்துக்கு மீறியதாக குற்றச்சாட்டப்பட்ட சூழல், இவரின் தாய் மனோரமா கையில் துப்பாக்கியுடன் வாக்குவாதத்தில் ஈடுபடும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஜெனிட்டா ரோஸ்லின்

மகாராஷ்டிர மாநிலத்தில் பயிற்சி பெண் ஐஏஎஸ் அதிகாரி பூஜா கேட்கர். பயிற்சியின்போது அதிகாரத்துக்கு மீறிய தாக குற்றச்சாட்டப்பட்ட சூழல், தற்போது, இவரின் தாய் மனோரமா கையில் துப்பாக்கியுடன் வாக்குவாதத்தில் ஈடுபடும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மகாராஷ்டிர மாநிலத்தில் பயிற்சி பெண் ஐஏஎஸ் அதிகாரியாக பணியாற்றி வருபவர் பூஜா கேட்கர். இவர், பயிற்சியின்போது அதிகாரத்துக்கு மீறிய செயல்களில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.

சொந்த வாகனத்தில் மகாராஷ்டிர அரசு என்று ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டதோடு, சைரன் ஒலியையும் பொருத்திக்கொண்டார் எனவும், புனே கூடுதல் கலெக்டர் அஜய் மோரே வெளியே சென்றபோது, அவரது அறையை முன் அனுமதியின்றி பூஜா கேட்கர் அபகரித்துக்கொண்டதாகவும், ஓபிசி பிரிவின்கீழ் இப்பதவிக்குத் தேர்வாகியிருப்பதாகவும், பார்வை மாற்றுத்திறனாளி என சான்றிதழ் கொடுத்து தேர்ச்சி பெற்றிருப்பதாகவும் பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகிறது. இந்நிலையில், பூஜா கேட்கரின் பெற்றோரும் தற்போது ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளனர்.

புனேவின் முல்ஷி தெஹ்சில், தத்வாலி கிராமத்தில், ஓய்வு பெற்ற மகாராஷ்டிர அரசு அதிகாரியான இருந்தவர் பூஜாவின் தந்தை திலீப் கேத்கர. இவர்,முல்ஷி தாலுகாவில் 25 ஏக்கர் உட்பல பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிலங்களை வாங்கி குவித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், இவர்கள் நிலத்தில் அருகில் இருக்கும் அக்கம் பக்கத்தினரின் நிலங்களையும் ஆக்கிரமிப்பு செய்ய முன்றதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகிறது.

இந்தவகையில், விவசாயி ஒருவரின் நிலத்தை பூஜாவின் தாயான மனோரமா கேட்கர் ஆக்கிரமிக்க முயன்றபோது, அந்நிலத்திற்கு சொந்தமான விவசாயி தர இயலாது என எதிர்த்துள்ளார்.

இதனால், ஆத்திரமடைந்த மனோரமா தனது பாதுகாவலர்களுடன் கையில் துப்பாக்கியுடன் வந்து, அந்த விவசாயியை மிரட்டியுள்ளார். இதனை உள்ளூர் நபர் ஒருவர் விடியோவாக பதிவு செய்யவே, இது சமூக வலைதளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட நபர் புனே காவல்நிலையத்தில் மனோரம் கேட்கர் மற்றும் திலீப் கேட்கர் ஆகியோரின் மீது தன்னை மிரட்டுவதாக புகார் அளித்துள்ளார்.

இந்நிலையில், இந்நபர் அளித்த புகாரின் பேரில் இவர்களின் மீதும், மேலும் இதில் தொடர்புடைய ஐவரின் மீதும் புனேவில் உள்ள பாட் காவல் நிலையத்தில் ஐபிசியின் 323, 504 மற்றும் 506 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இது குறித்து போலீஸ் அதிகாரி தெரிவிக்கையில், “சமூக ஊடக தளங்களில் பரவி வரும் வீடியோவை நாங்கள் அறிந்துள்ளோம். உண்மைகள் கண்டறியப்பட்டதும், நாங்கள் விசாரணையைத் தொடங்குவோம். மனோரமா கேட்கரிடம் துப்பாக்கிக்கான உரிமம் உள்ளதா என்பதை நாங்கள் விசாரிப்போம்" என்று தெரிவித்துள்ளார்.

இந்தவகையில், பூஜாவை தொடர்ந்து தற்போது அவரின் பெற்றோரும் சர்ச்சையில் சிக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.