இந்தியா

மும்பையின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களை வீழ்த்திய புதுச்சேரி பந்து வீச்சாளர் சாந்த மூர்த்தி!

மும்பையின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களை வீழ்த்திய புதுச்சேரி பந்து வீச்சாளர் சாந்த மூர்த்தி!

EllusamyKarthik

இருபது ஆண்டுகளுக்கு முன்னர் கிரிக்கெட்டில் சாதிக்க வேண்டுமென்ற பெருங்கனவோடு களம் இறங்கியவர் புதுச்சேரி - காலப்பாட்டு பகுதியை சேர்ந்த கிரிக்கெட் வீரர் சாந்த மூர்த்தி. அப்போது ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வந்த அவர் இன்று டி20 போட்டிகளில் விளையாடும் வகையில் தன் திறனை தக்க வைத்துக்கொண்டு விளையாடி வருகிறார். தற்போது நடைபெற்று சையத் முஷ்டக் அலி கோப்பைக்கான தொடரில் புதுச்சேரி அணிக்காக விளையாடி வரும் அவர் மும்பை அணிக்கு எதிரான  ஆட்டத்தில் மேட்ச் வின்னிங் ஆட்டத்திறனை வெளிப்படுத்தினார்.

41 வயதான வலது கை வேகப்பந்து வீச்சாளரான அவர் மும்பை அணிக்கு எதிராக மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற அந்த அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களான யாஷஸ்வி ஜெய்ஸ்வால், ஆதித்தியா தாரே, சூரியகுமார் யாதவ், சித்தேஷ் லாட் மற்றும் சுஜித் நாயக் விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதனால் மும்பை அணி 19 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 94 ரன்களை எடுத்தது. சாந்த மூர்த்தி 4 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு 20 ரன்களையும் கொடுத்திருந்தார். தொடர்ந்து புதுச்சேரி அணி 19 ஓவர்களில் 95 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது.

“17 வயதிலிருந்து கிரிக்கெட் விளையாடி வருகிறேன். எனக்கு கிரிக்கெட் விளையாடும் ஆற்றல் உள்ளது என்று நம்புகிறேன். வயது என்பது வெறும் நெம்பர் தான். எந்த பார்மெட் கிரிக்கெட்டாக இருந்தாலும் என்னால் முடியுமென்ற நம்பிக்கை உள்ளது. ரைட் லைன் மற்றும் லெந்தில் பந்து வீச வேண்டும் என முடிவு செய்தேன். ஆடுகளமும் அதற்கு கை கொடுத்தது. மும்பை மாதிரியான அணிக்கு எதிராக ஐந்து விக்கெட் வீழ்த்த வேண்டுமென்ற கனவு நிஜமாகியுள்ளது. புகழ்மிக்க வான்கடே மைதானத்தில் விளையாடும் வாய்ப்பு எல்லா கிரிக்கெட்டருக்கும் கிடைக்காது. எனக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது, எனது ஆட்டத்திலும் சாதிக்க முடிந்தது எனது கெரியரில் பெரிய சிறப்பாகும்” என சொல்கிறார் சாந்த மூர்த்தி. TNPL மற்றும் ரஞ்சி கோப்பை தொடரிலும் சாந்த மூர்த்தி விளையாடி உள்ளார்.

Santha Moorthy starred with the ball, scalping five wickets, to set up Pondicherry's six-wicket win over Mumbai. ?? #MUMvCAP #SyedMushtaqAliT20

Watch the highlights of the match ??https://t.co/J8w0MtFDh1 pic.twitter.com/o16iJI39Sm
— BCCI Domestic (@BCCIdomestic) January 17, 2021

41 வயதான அவர் ஒரு டி 20 ஆட்டத்தில் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்திய வயதில் பெரிய பந்து வீச்சாளர் என்ற சாதனையை படைத்துள்ளார். இந்த சீசனில் சாந்த மூர்த்தி விளையாடிய முதல் போட்டியும் இது தான். நான்கு போட்டிகளில் விளையாடியுள்ள புதுச்சேரி 2 போட்டிகளில் வென்றுள்ளது.