இந்தியா

ஒரேநாள் மழை: 100 ஆண்டுகள் பழமையான வாரச்சந்தை பாதிப்பு

ஒரேநாள் மழை: 100 ஆண்டுகள் பழமையான வாரச்சந்தை பாதிப்பு

webteam

புதுச்சேரியில் ஒரேநாள் மழையால் 100 ஆண்டுகள் பழமையான மதகடிப்பட்டு வாரச்சந்தை வியாபாரம் பாதிப்படைந்தது. 

புதுச்சேரியில் பெருமை வாய்ந்த மதகடிப்பட்டு வாரச்சந்தை செயல்பட்டு வருகிறது. திருபுவனை சட்டமன்றத்தொகுதியில் 100 ஆண்டுகாலமாக உள்ள இச்சந்தை, செவ்வாய்கிழமைகளில் கூடும் வாரச்சந்தை ஆகும். இந்நிலையில் நேற்று பெய்த ஒரேநாள் மழையே, சந்தை முழுவதையும் சகதிக்காடாக மாற்றி வியாபாரிகளையும், வாடிக்கையாளர்களையும் சிரமத்திற்கு ஆளாக்கிவிட்டது.

இதுகுறித்து கூறும் வியாபாரிகள், ஆயிரக்கணக்கானோர் வந்துசெல்லும் வாரச்சந்தைக்கு கடைகள் அமைத்துத் தர வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் இதுகுறித்து பலமுறை மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் அவர்கள் குறைகூறுகின்றனர். சாலைகள், கழிவறை வசதிகள் எதுவும் சந்தையில் இல்லை என்றும், அவற்றையும் ஏற்படுத்தித்தர பல ஆண்டுகளாக அரசிடம் கோரிக்கை விடுத்துவருவதாகவும் கூறுகிறார்கள். சாதாரண மழைக்கே இந்த நிலை என்றால், கனமழை காலத்தில் வாரச்சந்தையின் நிலை மிகவும் மோசமானதாக மாறிவிடும் என்றும், தங்களின் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும் என்றும் வியாபாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.