Kerala Lottery pt desk
இந்தியா

கேரளாவில் வாங்கிய லாட்டரி சீட்டு - ரூ.20 கோடி பரிசை வென்ற புதுச்சேரி ஐயப்ப பக்தர்

புதுச்சேரியில் இருந்து சபரிமலைக்கு சென்ற ஐயப்ப பக்தர் ஒருவருக்கு, கேரளாவில் வாங்கிய புத்தாண்டு பம்பர் குலுக்கல் லாட்டரியில் ரூ.20 கோடி பரிசு கிடைத்துள்ளது.

webteam

செய்தியாளர்: ரகுமான்

கேரள அரசு கடந்த ஆண்டு கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்தது. இதில் முதல் பரிசாக ரூ.20 கோடி அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் புதுச்சேரியைச் சேர்ந்த 33 வயதான தொழிலதிபர் ஒருவர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சபரிமலை கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்துள்ளார். இதையடுத்து திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாப சுவாமி கோயிலிலும் வழிபாடு நடத்தியுள்ளார்.

money

அப்போது, கோயில் அருகே இருந்த லாட்டரி டிக்கெட் கடையில், லாட்டரி சீட்டை வாங்கியுள்ளார். தற்போது அந்த லாட்டரி சீட்டுக்கு முதல் பரிசாக ரூ.20 கோடி விழுந்துள்ளது. இதையறிந்த அந்த தொழிலதிபர், நேரடியாக கேரள அரசின் லாட்டரி இயக்குனரகத்தை தொடர்பு கொண்டு தனது லாட்டரி டிக்கெட்டை சமர்ப்பித்துள்ளார். அவருக்கு வரி மற்றும் ஏஜென்ட் கமிஷன் 40 சதவீதம் போக 12 கோடி ரூபாய் கிடைக்கும்.

இந்நிலையில், பாதுகாப்பு கருதி அவர் தன் பெயரை வெளியிட வேண்டாம் என கேட்டுக்கொண்டதாக கேரள அரசு தெரிவித்துள்ளது.