இந்தியா

புதுச்சேரி விடுதலை நாள் கொண்டாட்டம்: வண்ண விளக்குகளால் ஜொலிக்கும் அரசு கட்டடங்கள்

புதுச்சேரி விடுதலை நாள் கொண்டாட்டம்: வண்ண விளக்குகளால் ஜொலிக்கும் அரசு கட்டடங்கள்

நிவேதா ஜெகராஜா

புதுச்சேரி விடுதலை நாளையொட்டி, அங்குள்ள அரசுக் கட்டடங்களும் தலைவர்களின் சிலைகளும் வண்ணவிளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.

பிரெஞ்சுக்காரர்களின் ஆதிக்கத்தில் இருந்த புதுச்சேரி 1954 ஆம் ஆண்டு நவம்பர் ஒன்றாம் தேதி விடுதலையானது. விடுதலை நாளையொட்டி, புதுச்சேரி கடற்கரை சாலையில் முதலமைச்சர் ரங்கசாமி தேசியக்கொடியை ஏற்ற உள்ளார். காவல்துறையினரின் அணிவகுப்பும் நடைபெற உள்ளது.

விடுதலை நாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, புதுச்சேரி சட்டப்பேரவை வளாகம், ஆளுநர் மாளிகை, தலைமைச் செயலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள், கடற்கரை சாலை, பாரதி பூங்கா ஆகியவை வண்ண வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. பாரதியார் உள்ளிட்ட தேசத் தலைவர்களின் சிலைகளும் அலங்கரிக்கப்பட்டுள்ளன.