இந்தியா

திரையரங்குகள், மதுபான பார்களை திறக்க புதுச்சேரி அரசு அனுமதி

திரையரங்குகள், மதுபான பார்களை திறக்க புதுச்சேரி அரசு அனுமதி

Veeramani

மதுபான பார்கள், சினிமா திரையரங்குகள் திறக்க அனுமதியளித்து புதுச்சேரி அரசு உத்தரவு, பொது முடக்கத்துடன் கூடிய தளர்வுகள் வரும் அக்டோபர் 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்படும் எனவும் அறிவிப்பு.

புதுச்சேரி மாநிலத்தில் தளர்வுகளுடன் கூடிய பொதுமுடக்கத்தை நீட்டிப்பு செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு 5ஆம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கும் மாணவர்கள் சந்தேகம் இருந்தால் விருப்பத்தின் அடிப்படையில் பள்ளிக்கு வரலாம் அதே போன்று 9 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 12ந்தேதி முதல் வகுப்புகள் தொடங்கும். விளையாட்டு வீரர்களுக்கான நீச்சல் குளம் அக்டோபர் 15ந்தேதி முதல் திறக்கலாம், சினிமா திரையரங்குகள் 50 சதவீத பார்வையாளர்களுடன் அக்டோர்பர் 15ந்தேதி முதல் திறக்கலாம் என்று புதுச்சேரி அரசு அனுமதி அளித்துள்ளது.

பொழுது போக்கு பூங்காக்கள், சுற்றுலாத்தளங்கள் அக்டோபர் 15 முதல் திறக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. அனைத்து கடைகள் மற்றும் தனியார் அலுவலங்கள் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை திறக்கவும், உணவங்கள் மட்டும் இரவு 9 மணி வரை அமர்ந்து சாப்பிடவும் 10 மணிவரை பார்சல் விநியோகம் செய்யவும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.. மதுபானக்கடைகள்,(பார்) மற்றும் அமர்ந்து சாப்பிடும் மதுபானக்கூடங்களுக்கு கலால் விதிமுறைகள்படி இரவு 9 மணி வரை திறந்திருக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் உள்ள கடற்கரைகள் சாலைகளில் இரவு 9 மணிவரை மட்டுமே நடைபயிற்சி செய்ய அனுமதித்து மத்திய அரசு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி செயல்பட புதுச்சேரி அரசு உத்தரவிட்டுள்ளது.