இந்தியா

புதுவை: குடோனில் பதுக்கி வைத்திருந்த போதைப் பொருட்கள் பறிமுதல் - மதிப்பு எவ்வளவு தெரியுமா?

புதுவை: குடோனில் பதுக்கி வைத்திருந்த போதைப் பொருட்கள் பறிமுதல் - மதிப்பு எவ்வளவு தெரியுமா?

webteam

புதுச்சேரியில் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களை விற்பனை செய்ததாக மொத்த விற்பனையாளர் உள்ளிட்ட இருவரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.

புதுச்சேரியில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் சிறுவர்களுக்கு தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக சிறப்பு தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து தகவலின் பேரில், புதுச்சேரி பகுதிகளில் உள்ள பெட்டி கடைகளில் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுப்பட்டனர்,

அப்போது வடக்கு காவல் சரகத்திற்கு உட்பட்ட மேட்டுபாளையம், ரெட்டியார்பாளையம், தன்வந்திரி நகர், சேதராபட்டு அகிய பகுதிகளில் விற்பனை செய்யப்பட்ட தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், அந்த கடை உரிமையாளரிகளிடம் விசாரணை நடத்தினர். அதில், புதுச்சேரி தொண்டமானத்தம் பகுதியைச் சேர்ந்த மொத்த விற்பனையாளர் பாபு என்பவரிடம் வாங்கி வந்து விற்பனை செய்வதாக தெரிவித்தனர்.

இதையடுத்து தொண்டமானத்தம் சேதரபட்டு சாலையில் மளிகை கடை வைத்திருந்த பாபுவை கைது செய்த தனிப்படை போலீசார், அவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் பாபு, தனக்குச் சொந்தமான கிடங்கில் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களை பதுக்கி வைத்து சில்லறை விற்பனை செய்து வந்ததாகவும், இப்பொருட்களை கிருஷ்ணா நகரைச் சேர்ந்த பிரகாஷ் என்பவர் பெங்களூரில் இருந்து வாங்கி வந்து தருவதாக ஒப்புக்கொண்டார்.

இதைத் தொடர்ந்து போலீசார் பாபுவிடம் இருந்து விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த ரூ.10 லட்சம் மதிப்பிலான போதைப் பொருள் ரூ.8 லட்சம் ரொக்கம் மற்றும் டாடா ஏஸ் வாகனம் உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்து, பிரகாஷையும் கைது செய்து அவர்களை வில்லியனூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர், இதனை அடுத்து வில்லியனூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து கைது செய்யப்பட்டவர்களை நீதிபதி வீட்டில் ஆஜர்ப்படுத்தி புதுச்சேரி காலாபட்டு சிறையில் அடைத்தனர்.