மயங்கிவிழுந்த காங்கிரஸ் வேட்பாளர் pt desk
இந்தியா

புதுச்சேரி: தேர்தல் பரப்புரையின் போது மயங்கிவிழுந்த காங்கிரஸ் வேட்பாளர்!

புதுச்சேரியில் சுட்டெரிக்கும் கடும் வெயிலில் பரப்புரை மேற்கொண்ட காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம் மயக்கமடைந்தார் முதலுதவி சிகிச்சைக்குப் பின் மீண்டும் பரப்புரையை தொடக்கினார்.

webteam

செய்தியாளர்: ரகுமான்

புதுச்சேரியில் களம்காணும் வேட்பாளர்கள் இறுதி செய்யப்பட்ட நிலையில், அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் மற்றும் அவகளது கட்சித் தலைவர்கள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் அந்த அனலின் வெப்பத்தை தாங்க முடியாமல் பொதுமக்கள் அவதிபட்டுக் கொண்டிருக்க, ஒரு புறம் தேர்தல் பரப்புரையும் அனல் பறந்து கொண்டிருக்கிறது.

election campaign

இந்நிலையில், இன்று காலை ரெயின்போ நகர் மற்றும் வெங்கட்டா நகர் பகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம் எம்.பி, முன்னாள் முதலமைச்சர் நாராயணசமி உள்ளிட்ட கூட்டணி கட்சினருடன் திறந்த வாகனத்தில் பரப்புரை மேற்கொண்டிருந்தார் அப்போது. திடீரென மயக்கமடைந்த வைத்திலிங்கம் எம்.பி, அருகில் இருந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ சாய், அவரை கைத்தாங்களாக ஒரு வீட்டிற்கு அழைத்துச் சென்றார்.

இதையடுத்து அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்த நிலையில், அரைமணி நேரத்திற்குப் வைத்திலிங்கம் மீண்டும் பரப்புரை மேற்கொண்டார். அனல் பறக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் வைத்திலிங்கம் எம்.பியை வெற்றிப்பெறச் செய்ய தீவிரமாக பரப்புரை மேற்கொள்வோம் என முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி புதிய தலைமுறைக்கு தெரிவித்தார்.