இந்தியா

புதுச்சேரி: 339 கிலோ எடை, 5.8 அடி உயரத்தில் எஸ்.பி.பி-யின் தத்ரூப சாக்லெட் சிலை

புதுச்சேரி: 339 கிலோ எடை, 5.8 அடி உயரத்தில் எஸ்.பி.பி-யின் தத்ரூப சாக்லெட் சிலை

kaleelrahman

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகையையொட்டி மறைந்த பாடகர் எஸ்.பி.பிக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், புதுச்சேரியில் 339 கிலோ எடையில் சாக்லெட்டுகளை கொண்டு 5.8 அடி உயரத்தில் செய்யப்பட்டுள்ள எஸ்.பி.பாலசுப்ரமணியனின் சாக்லெட் சிலை பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

புதுச்சேரி மிஷன் வீதியில் உள்ள சூகா என்ற சாக்லெட் பேக்கரியில் முழுக்க முழுக்க சாக்லெட்டால் செய்யும் உணவு பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இங்கு பணிபுரிந்து வரும் ராஜேந்திரன் என்பவர் ஒவ்வொரு ஆண்டும் சாக்லெட்டால் செய்யப்படும் பொருட்களில் தன்னுடைய புதிய கலைத்திறமைகளை வெளிப்படுத்தி வருகிறார்.


அந்த வகையில் கடந்த காலங்களில் சாக்லெட்டை கொண்டு ரஜினிகாந்த், சச்சின் டெண்டுல்கர், அப்துல்கலாம், இந்திய விமானப்படை பைலட் அபிநந்தன் ஆகியோரின் உருவங்களை வடிவமைத்துள்ளார். இந்நிலையில் வருகின்ற கிறிஸ்துமஸ் மற்றும் 2021 புத்தாண்டையொட்டி மறைந்த பாடகர் எஸ்.பி.பிக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும், அவரது நினைவை போற்றும் வகையிலும் 339 கிலோ சாக்லெட்டை கொண்டு 5.8 அடி உயரத்தில் மறைந்த பாடகர் எஸ்.பி.பியின் சாக்லெட் சிலையை வடிவமைத்துள்ளார்.


ராஜேந்திரனால் உருவாக்கப்பட்டுள்ள பாடகர் எஸ்.பி.பியின் சாக்லெட் சிலை அவரது ரசிகர்களை திகைக்க வைத்துள்ளது. சிலையை பார்த்தவர்கள் பலரும் ராஜேந்திரனை பாராட்டி மகிழ்கின்றனர்.