இந்தியா

கொரோனா எதிரொலி: மகாராஷ்டிராவில் 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்திவைப்பு!

கொரோனா எதிரொலி: மகாராஷ்டிராவில் 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்திவைப்பு!

EllusamyKarthik

இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை தீவிரமடைந்து வருகிறது. நாளுக்கு நாள் நோய் தொற்றினால் பாதிக்கபட்டு வரும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே இருக்கிறது. சராசரியாக ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் இந்தியாவில் தினந்தோறும் கொரோனாவால் பாதிக்கபட்டு வருகின்றனர். இதில் மகாராஷ்டிரா மாநிலம் முதலிடத்தில் உள்ளது. 

அந்த மாநிலத்தில் நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொது தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக மகாராஷ்டிரா மாநில அரசு அறிவித்துள்ளது. அந்த மாநிலப் பள்ளி கல்வித்துறை அமைச்சர் வர்ஷா கெய்க்வாட் இதனை தெரிவித்துள்ளார். 

“தற்போதைய சூழலில் மாநிலத்தில் பொதுத்தேர்வு நடத்துவது இயலாத காரியம். இதில் மாணவர்களின் நலனையும் பார்க்க வேண்டியுள்ளது. மாணவர்களின் உடல்நலனில் நாங்கள் அதிக கவனம் செலுத்துகிறோம். அதனால் இந்த முடிவை எடுத்துள்ளோம். வரும் மே மாத இறுதியில் 12 ஆம் வகுப்பிற்கும், ஜூன் மாதம் பத்தாம் வகுப்பிற்கும் தேர்வுகள் நடத்த திட்டமிட்டுள்ளோம்” என அவர் தெரிவித்துள்ளார்.