இந்தியா

"ரயில் டிக்கெட்டுகள் பதிவுசெய்தால் இந்தியில் குறுஞ்செய்தி" - பொதுமக்கள் புகார்!

Sinekadhara

தமிழகத்தில் ரயில் டிக்கெட்டுகள் பதிவு செய்தால் பயணிகளுக்கு இந்தியில் குறுஞ்செய்தி வருவதாக புகார் எழுந்துள்ளது.

ரயில் டிக்கெட்டுகள் பதிவு செய்யப்பட்ட உடன் அதனை உறுதிப்படுத்துவதற்கான குறுஞ்செய்தி, பதிவு செய்த செல்போன் எண்ணுக்கு அனுப்பப்படும். பொதுவாக ஆங்கிலத்தில் இந்த குறுஞ்செய்தி வரும். ஆனால் தற்போது இந்தியில் மட்டுமே குறுஞ்செய்தி வருவதாக தெரியவந்துள்ளது. இது தொடர்பாக பல்வேறு ரயில் பயணிகள், நலச் சங்கங்கள் சார்பில் ரயில்வே அமைச்சகத்திற்கு புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள திமுக எம்பி தமிழச்சி தங்கபாண்டியன், இந்தியாவில் பல மாநிலங்களில் பெரும்பாலான மக்களுக்கு இந்தி தெரியாது என்றும், ரயில்வே அமைச்சகம் இதில் கவனம் செலுத்தி அந்தந்த மாநில மொழிகளில் குறுஞ்செய்தியை அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். மத்திய அரசு இதுபோல அனைத்து தளங்களிலும் இந்தியை திணிக்காமல், அந்தந்த மாநில மொழிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.