இந்தியா

கிசான் முறைகேடு தொடர்பாக மக்கள் புகார் அளிக்கலாம் - சிபிசிஐடி

கிசான் முறைகேடு தொடர்பாக மக்கள் புகார் அளிக்கலாம் - சிபிசிஐடி

Sinekadhara


இந்திய அரசால் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு வழங்கப்படும் நிதியில் தகுதியற்ற பல விவசாயிகள், அதிகாரிகள் மற்றும் அவுட் சோர்சிங் நபர்கள் சட்டவிரோத பதிவினை செய்து பயனடைந்துள்ளனர் என்ற புகார்கள் எழுந்தன. இந்த புகார்களின் அடிப்படையில் இதுவரை 13 குற்ற வழக்குகள் தகுந்த சட்டப்பிரிவுகளில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து பல்வேறு மாவட்டங்களில் உள்ள குற்றப் புலனாய்வுத் துறையில் விசாரணையும் நடந்துவருகிறது.

இதுவரை 52 நபர்கள் இந்த மோசடியில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்டுள்ளனர். இதனால் இந்த திட்டம் தொடர்பாக பொதுமக்கள், அரசு அதிகாரிகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், சமூக சேவையாளர்கள் மற்றும் தகவல் அறிந்தோர் உபயோகமான தகவல்களைப் பகிர்ந்துகொள்ளலாம். இதில் பொதுமக்கள் அளிக்கும் தகவல்கள், புகார்களின் ரகசியம் காக்கப்படும். மேலும் சரியான தகவல்களைக் கொடுப்பவர்களுக்கு தகுந்த வெகுமதிகள் வழங்கப்படும் எனவும் சிபிசிஐடி தெரிவித்துள்ளது.

கிசான் முறைகேடு பற்றிய தகவல்களை/ புகார்களை கீழ்க்கண்ட தொலைபேசி/ மின்னஞ்சல்/முகவரிக்குத் தெரியப்படுத்தலாம்:
தொலைபேசி: 044-2851 3500

வாட்ஸ்அப் எண்: 9498181035

மின்னஞ்சல்: cbcid2020@gmail.com

முகவரி: Crime Branch CID, No.220, Pantheon Road, Egmore, Chennai, Tamil Nadu -600 008