இந்தியா

தொண்டர்களை காக்க தடுப்புச் சுவரை ஏறி குதித்து எதிர்த்து நின்ற பிரியங்கா காந்தி!

தொண்டர்களை காக்க தடுப்புச் சுவரை ஏறி குதித்து எதிர்த்து நின்ற பிரியங்கா காந்தி!

webteam

போலீஸ் லத்தியடியில் இருந்து தொண்டர்களை காக்க பிரியங்கா காந்தி தடுப்பு சுவரை ஏறி குதித்துள்ளார். இதுகுறித்த வீடியோ வைரலாகி வருகிறது.

ஹத்ராஸை சேர்ந்த 19 வயது இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உயிரிழந்துள்ளார். அந்த பெண்ணின் குடும்பத்தினரை நேற்று முன்தினம் சந்திக்க சென்ற ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் உத்தரபிரதேச போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டனர். அப்போது போலீசாருடன் ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் ராகுல்காந்தி கீழே விழுந்தார்.

இதையடுத்து உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தை நான் சந்திப்பதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது என்று காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி ட்வீட் செய்திருந்தார். இதைத்தொடர்ந்து இன்று மீண்டும் ஹத்ராஸ் பெண்ணின் குடும்பத்தினரை சந்திக்க ராகுல்காந்தியும் பிரியங்கா காந்தியும் சென்றனர். அப்போது முதலில் அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக தெரிகிறது. இதனால் அங்கிருந்த காங்கிரஸ் தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போலீஸ், தொண்டர்கள் மீது லத்தியடி நடத்தினர்.

இதைப்பார்த்த பிரியங்கா காந்தி, உடனடியாக அங்கிருந்த தடுப்பு சுவரை ஏறி குதித்து தொண்டர்கள் மீது தாக்குதல் நடத்தக்கூடாது என போலீசை எதிர்த்து நின்றார். இதுகுறித்து வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.