மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் இரண்டாவது வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது.
மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 11 ஆம் தேதி தொடங்கி மே 19 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இதற்கான வேட்பாளர் பட்டியல் தயாரிப்பு பணிகளில் கட்சிகள் தீவிரமாகியுள்ளன. காங்கிரஸ் கட்சி, கடந்த 7 ஆம் தேதி 15 பேர் கொண்ட முதல் வேட்பாளர் பட்டியலை வெளியி ட்டது. இதில், சோனியா ரேபரேலி தொகுதியிலும், ராகுல் அமேதி தொகுதியிலும் போட்டியிடுவார்கள் என அறிவிக்கப்பட்டிருந்தது. இப்போது 21 பேர் கொண்ட இரண்டாவது பட்டியலை வெளியிட்டுள்ளது.
இதில், உத்தரப் பிரதேச காங்கிரஸ் தலைவர் ராஜ் பப்பர், முன்னாள் மத்திய அமைச்சர் ஸ்ரீபிரகாஷ் ஜெய்ஸ்வால், முன்னாள் உள்துறை அமைச் சர் சுஷில் குமார் ஷிண்டே, பிரியா தத் ஆகியோர் நட்சத்திர வேட்பாளர்களாக களமிறக்கப்பட்டுள்ளனர். ராஜ் பாப்பர், உ.பி.யின் மொராதாபாத் திலும், ஸ்ரீபிரகாஷ் ஜெய்ஸ்வால் கான்பூரிலும், சுஷில் குமார் ஷிண்டே சோலாபூரிலும், பிரியா தத், மும்பை வடக்கு மத்திய தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.
காங்கிரஸ் கட்சியின் விவசாய அணித் தலைவர் நானா படோல் நாக்பூரிலும், முன்னாள் மத்திய அமைச்சர் மிலிந்த் தியோரா, மும்பை தெற்கு தொகுதியிலும், பாஜகவில் இருந்து விலகி அண்மையில் காங்கிரஸில் இணைந்த சாவித்ரி புலே, பராய்ச் தொகுதியிலும் போட்டியிடுகின் றனர்.
காங்கிரஸ் வெளியிட்ட இரண்டாவது வேட்பாளர்கள் பட்டியலில் 16 பேர் உத்தரப் பிரதேசத்திலும், 5 பேர் மகாராஷ்டிராவிலும் போட்டியிடு கின்றனர்.