தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் 216 அடி உயர ராமானுஜர் சிலையை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்க உள்ளார்.
வைணவ மத ஆச்சார்யர்களில் ஒருவரும் இந்து மத சீர்திருத்தவாதிகளில் ஒருவருமான ராமானுஜரின் ஆயிரமாவது பிறந்த ஆண்டை முன்னிட்டு அவருக்கு ஹைதராபாத்தில் பிரம்மாண்ட சிலை அமைக்கப்பட்டுள்ளது. சமத்துவத்திற்கான சிலை என பெயரிடப்பட்டுள்ள இச்சிலை தங்கம், வெள்ளி, தாமிரம், வெண்கலம், துத்தநாகம் ஆகிய 5 உலோகங்களை கலந்து செய்யப்பட்ட பஞ்சலோக சிலை ஆகும்.
உலகில் உலோகத்தால் செய்யப்பட்ட மிக உயரமான சிலைகளில் ஒன்றாக இது கருதப்படுகிறது. ஹைதராபாத் அருகே நடைபெறும் சிலைத்திறப்பு விழாவில் மாநில முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் உள்ளிட்டோரும் கலந்துகொள்ள உள்ளனர்