இந்தியா

தூய்மை இந்தியா திட்டம் 2.0: பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்

தூய்மை இந்தியா திட்டம் 2.0: பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்

JustinDurai
தூய்மை இந்தியா திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைக்கிறார்.
நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி முதல் முறையாக பதவியேற்றபோது, காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, தூய்மை இந்தியா திட்டத்தை தொடங்கி வைத்தார். இதைத் தொடர்ந்து பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள், ரயில்வே நிலையங்கள், பேருந்து நிலையங்களில் தூய்மை இந்தியா திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதற்காக நடிகர், நடிகைகள், பிரபலங்கள் ஆகியோர் மூலம் குப்பை இல்லாத நாட்டை உருவாக்குவதற்கான பரப்புரைகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்நிலையில், அதன் இரண்டாம் கட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைக்கிறார். குப்பை இல்லாத தூய்மையான நாடாக மாற்றும் வகையில் தூய்மை இந்தியா திட்டம் 2.O மற்றும் நீர் நிலைகளை பாதுகாக்கும் வகையில், அம்ருத் 2.O என்ற திட்டத்தையும் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.