மோடி - யோகி ஆதித்யநாத் ட்விட்டர்
இந்தியா

‘வால்மீகி’ விமான நிலையத்தை திறந்துவைக்க அயோத்தி செல்கிறார் பிரதமர் மோடி

அயோத்தி சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி புதிய விமான நிலையம் மற்றும் மேம்படுத்தப்பட்ட ரயில் நிலையத்தை திறந்து வைக்க உள்ளார்.

PT WEB

இன்னும் சற்று நேரத்தில் பிரதமர் நரேந்திர மோடி அயோத்தி சென்றடைகிறார். அங்கு புதிய விமான நிலையம் மற்றும் மேம்படுத்தப்பட்ட ரயில் நிலையத்தை திறந்து வைக்க உள்ளார் பிரதமர்.

இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், "அயோத்தி நகரில் இன்று நடைபெறும் நிகழ்ச்சிகளில் 11 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைக்கப்படவுள்ளது.

மேலும் புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டப்படும். இது தவிர உத்தரபிரதேசத்தின் பிற பகுதிகளிலும் 4 ஆயிரத்து 600 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் தொடங்கி வைக்கப்படும். அயோத்தியில் ஆயிரத்து 450 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள நவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள விமான நிலையத்தின் முதல் பகுதியை திறந்து வைக்கப்படவுள்ளது.

அந்த விமான நிலையத்திற்கு வால்மீகி என பெயர் சூட்டப்படும் இதேபோல், அயோத்தி நகரில் மேம்படுத்தப்பட்ட ரயில் நிலையம் திறக்கப்படவுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு அயோத்தியில் உயரடுக்கு பாதுகாப்பு உட்பட ஐந்தாயிரம் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.