இந்தியா

ராமர் கோயில் அடிக்கல் விழா ஏற்பாடு பணிகளில் ஈடுபட்ட மதகுரு, 14 காவலர்களுக்கு கொரோனா!

ராமர் கோயில் அடிக்கல் விழா ஏற்பாடு பணிகளில் ஈடுபட்ட மதகுரு, 14 காவலர்களுக்கு கொரோனா!

webteam

அயோத்தி நடைபெறவுள்ள ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழாவிற்கான ஏற்பாடு பாணிகளில் ஈடுபட்ட மதகுரு ஒருவர் மற்றும் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டிருந்த காவலர்கள் 15 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. 

அயோத்தியில் ராமர் கோயில் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா அடுத்த மாதம் ஆகஸ்ட் 5 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிகழ்விற்கு பிரதமர் மோடி மற்றும் பாஜக முக்கிய பிரமுகர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படும் நிலையில் தற்போது கோயிலின் தலைமை குருவின் உதவியாளரான பிரதீப் தாஸ் மற்றும் அங்கு பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த 14 காவலர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் அயோத்தி கோயில் அடிக்கல் நாடு விழா திட்டமிட்டப்படி நடக்கும் என கோயில் அறக்கட்டளை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விழாவிற்கு பிரதமர் மோடி வருவார் என எதிர்பார்க்கப்படும் நிலையில், கோயில் தளத்திலிருந்து  3 கிலோ மீட்டர் தொலைவில் ஹெலிகாப்டர் தரையிறங்குவதற்காக ஹெலிபேடு அமைக்கப்பட்டுள்ளது. மிகப் பெரிய அளவிலான சிசிடிவி திரைகள், வண்ண ஓவியங்கள் உள்ளிட்டவையால் அயோத்தி சாலைகள் முழுவதும் அலங்கரிங்கப்பட்டுள்ளது.

உத்திர பிரதேசத்தில் தற்போது வரை 29,997 நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அயோத்திலிருந்து மட்டும் 375 நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.