இந்தியா

குடியரசுத் தலைவர் தேர்தல்: தமிழக அரசியல் கட்சிகளின் வாக்குமதிப்பு

குடியரசுத் தலைவர் தேர்தல்: தமிழக அரசியல் கட்சிகளின் வாக்குமதிப்பு

webteam

குடியரசுத் தலைவருக்கான தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தமிழக அரசியல் கட்சிகளைச் சேர்ந்த எம்.எல்.ஏக்கள் மற்றும் எம்.பிக்களின் வாக்கு மதிப்பு எவ்வளவு என்பது தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழ்நாட்டில் இருந்து மக்களவை மற்றும் மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மொத்த எம்.பி.க்கள் 57 பேர். அதில் 39 பேர் மக்களவைக்கும்,18 பேர் மாநிலங்களவைக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அதேபோல் தமிழக சட்டப்பேரவை உறுப்பினர்களின் எண்ணிக்கை ஆர்.கே.நகர் தொகுதி நீங்கலாக மொத்த 233 ஆகும். அதில் அதிமுக எம்.எல்.ஏக்கள் சபாநாயகர் உட்பட135 பேரிடம் மொத்தம் 23 ஆயிரத்து 760 வாக்குகள் உள்ளன. 

இதே போல் மக்களவை, மாநிலங்களவை என சேர்த்து அதிமுக எம்பிக்கள் 49 பேரிடமும் 34 ஆயிரத்து 692 வாக்குகள் உள்ளன. திமுகவில் உள்ள 4 மாநிலங்களவை உறுப்பினர்களிடமும் மொத்தம் 2 ஆயிரத்து 832 வாக்குகள் உள்ளன. அதேபோல், திமுக எம்.எல்.ஏக்களின் எண்ணிகையை பொறுத்தவரை மொத்தம் 89 பேர் உள்ளதால் அவர்களிடம் 15 ஆயிரத்து 664 வாக்குகள் உள்ளன. 

தமிழக காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் 8 பேரிடமும், ஆயிரத்து 408 வாக்குகளும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியில் ஒரே ஒரு சட்டப்பேரவை உறுப்பினர் மட்டும் இருப்பதால், அந்த கட்சியிடம் 176 வாக்குகளும் உள்ளன. இதேபோல் தமிழகத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பாஜக, கம்யூனிஸ்ட் கட்சிகள் உட்பட பிற கட்சியை சேர்ந்த 4 எம்.பிக்களிடமும் 2ஆயிரத்து 832 வாக்குகள் உள்ளன.