வழக்குகளில் உயர்நீதிமன்றங்கள் அளிக்கும் தீர்ப்புகள் வழக்கில் தொடர்புடையவர்களுக்கு புரியும் மொழியில் இருப்பது அவசியம் என குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.
கேரள உயர்நீதிமன்றத்தின் வைர விழாவில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், உயர்நீதிமன்றத் தீர்ப்புகளை, வழக்கில் தொடர்புடையவர்கள் புரிந்துகொள்ளும் மொழியில் மொழிபெயர்பு செய்து தருவதற்கு ஒரு நடைமுறையை கொண்டுவரலாம் என கூறினார்.
தீர்ப்புகள் வழங்குவதற்கு காலதாமதம் ஆவது நமது நாட்டின் முக்கிய பிரச்னைகளில் ஒன்று என குறிப்பிட்ட குடியரசுத் தலைவர், இதனால் சமுதாயத்தின் அடிதட்டில் இருக்கும் மக்களே அதிகம் பாதிக்கப்படுவதாகவும் கூறினார். வழக்குகளை விரைந்து முடிப்பதற்கு ஒரு நடைமுறையை உருவாக்குவது அவசியம் என்றும் ராம்நாத் கோவிந்த் கூறினார்.