இந்தியா

தேவேந்திரகுல வேளாளர் மசோதாவிற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்!

தேவேந்திரகுல வேளாளர் மசோதாவிற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்!

webteam

தேவேந்திரகுல வேளாளர் மசோதாவிற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மசோதா நிறைவேறிய நிலையில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.

முன்னதாக, குடும்பன், காலாடி, பண்ணாடி, கடையன், பள்ளன், தேவேந்திர குலத்தான், வாதிரியார் ஆகிய ஏழு பட்டியலின உட்பிரிவுகளைச் சேர்ந்தவர்களை தேவேந்திரகுல வேளாளர் என்ற பொதுப்பெயரில் அழைப்பதற்கான மசோதாவை மத்திய அரசு கொண்டுவந்தது.

இதை மாநிலங்களவையில் மத்திய அமைச்சர் தாவர்சந்த் கெலோட் அறிமுகம் செய்த நிலையில், அ.தி.மு.க உறுப்பினர் நவநீதகிருஷ்ணன், காங்கிரஸ் கட்சியின் மல்லிகார்ஜுன கார்கே, மத்திய அமைச்சர் ராமதாஸ் அதவாலே உள்ளிட்டோர் இதன் மீதான விவாதத்தில் பங்கேற்றனர். அதன்பின் இந்த மசோதா எதிர்ப்பு ஏதுமின்றி குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது. இந்த மசோதாவுக்கு ஏற்கெனவே மக்களவை ஒப்புதல் அளித்த நிலையில், மாநிலங்களவையும் ஒப்புதல் அளித்தது. அதனைத்தொடர்ந்து மசோதா குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பிவைக்கப்பட்டது.