இந்தியா

ஆம்ஆத்மி எம்எல்ஏக்களை நீக்க கோரிய மனுவை நிராகரித்த குடியரசுத் தலைவர்

ஆம்ஆத்மி எம்எல்ஏக்களை நீக்க கோரிய மனுவை நிராகரித்த குடியரசுத் தலைவர்

webteam

டெல்லியில் ஆம்ஆத்மி கட்சியின் 11 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யக் கோரிய மனுவை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நிராகரித்துள்ளார்.

டெல்லியில் ஆம்ஆத்மியின் 11 எம்எல்ஏக்கள் ஆதாயம் தரும் இரட்டைப்பதவி வகிப்பதாகவும் அவர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் விவேக் கார்க் என்பவர் கடந்த 2017ம் ஆண்டு குடியரசுத் தலைவரிடம் மனு அளித்திருந்தார். இதை பரிசீலிக்குமாறு தேர்தல் ஆணையத்தை குடியரசுத் தலைவர் பணித்திருந்தார். 

இதை பரிசீலித்த தேர்தல் ஆணையம் அந்த 11 எம்எல்ஏக்களும் தாங்கள் வகிக்கும் மற்றொரு பதவிக்காக ஊதியமோ பிற சலுகைகளோ பெறுவதில்லை என்பதால் அவர்களை தகுதி நீக்கம் செய்யத் தேவையில்லை என தேர்தல் ஆணையம் குடியரசுத் தலைவருக்கு அறிக்கை அளித்திருந்தது. இதை ஏற்று தகுதி நீக்க மனுவை நிராகரிப்பதாக குடியரசுத் தலைவர் தெரிவித்துள்ளார்.