இந்தியா

பாதுகாப்பு துறையில் சிறந்து விளங்கியவர்களுக்கு விருது வழங்கினார் குடியரசு தலைவர்

பாதுகாப்பு துறையில் சிறந்து விளங்கியவர்களுக்கு விருது வழங்கினார் குடியரசு தலைவர்

Veeramani

டெல்லியில் நடைபெற்ற பாதுகாப்பு விருது வழங்கும் விழாவில் ராணுவ தளபதி ஜெனரல் மனோஜ் பாண்டே உட்பட 14 பேருக்கு பரம் விஷிஸ்ட் சேவா பதக்கங்களை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கினார்

டெல்லி குடியரசுத்தலைவர் மாளிகையில் இன்று பாதுகாப்பு துறையில் சிறந்து விளங்கிய நபர்களுக்கான பாதுகாப்பு விருது வழங்கும் விழா நடைபெற்றது. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் மத்திய அமைச்சர்கள் மூத்த அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.



இந்த விருது வழங்கும் விழாவில், மரணத்திற்கு பிந்தைய 6 பேர் உட்பட 13 பேருக்கு, சவுரிய சக்ரா விருதுகளை பாதுகாப்பு படைகளின் தலைமை தளபதியான குடியரசுத்தலைவர் ராம் நாத் கோவிந்த்  வழங்கினார். பணிக்காலத்தில் அதிகபட்ச அர்ப்பணிப்புடன் வீர தீரத்துடன் சிறப்பான பணியை வெளிப்படுத்தியவர்களுக்கு இந்த விருதுகள் வழங்கப்பட்டது.

இது தவிர, தற்போதைய ராணுவ தளபதியான ஜெனரல் மனோஜ் பாண்டே உட்பட 14 பேருக்கு பரம் விஷிஸ்ட் சேவா பதக்கங்களையும், 4 பேருக்கு உத்தம் யுத் சேவா பதக்கங்களையும், 24 பேருக்கு அதி விஷிஸ்ட் சேவா பதக்கங்களையும் குடியரசுத்தலைவர் இந்த விழாவில் வழங்கினார்.