எந்த நேரத்தில் போர் வந்தாலும் எதிர்கொள்ள விமானப்படை தயாராக இருப்பதாக விமானப்படைத் தளபதி பிஎஸ் தானோவ் தெரிவித்துள்ளார்.
இந்திய விமானப்படை உருவாக்கப்பட்டதன் 85-வது ஆண்டு விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தில் விமானப்படை வீரர்கள் சாகச பயிற்சியில் ஈடுபட்டனர். இதே போல நாட்டில் உள்ள பிற விமானப்படை தளங்களிலும் ஆண்டு தினம் வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், எந்த நேரத்தில் போர் வந்தாலும் எதிர்கொள்ள விமானப்படை தயாராக இருப்பதாக விமானப்படைத் தளபதி பிஎஸ் தானோவ் தெரிவித்துள்ளார். விமானப்படை ஆண்டு தினத்தை முன்னிட்டு டெல்லியில் பேசிய அவர், எந்த வகையான சவாலையும் சந்திக்கும் வகையில் விமானப்படை முழுத் திறனுடன் இருப்பதாகக் கூறினார். விமானப்படைத் தளங்களும் மேம்படுத்தப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார்.