பீகார் - மதுவிலக்கு முகநூல்
இந்தியா

“பீகாரில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பூரண மது விலக்கை ‘நீக்குவோம்’!” - சொன்னது யார் தெரியுமா?

PT WEB

தமிழ்நாட்டில் மது ஒழிப்பு கோரிக்கைகள் எழுந்துள்ள சூழலில், “பீகாரில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பூரண மது விலக்கை நீக்குவோம்” என அறிவித்திருக்கிறார் ஒரு அரசியல் தலைவர். தேர்தல் வியூக ஆலோசகராக இருந்து அரசியல்வாதியாக மாறிய பிரசாந்த் கிஷோர்-தான் அந்த தலைவர். இவர் ஜன சுராஜ் எனும் கட்சியை, அக்டோபர் 2ஆம் தேதி தொடங்குகிறார்.

பிரசாந்த் கிஷோர்

இதனை முன்னிட்டு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “பீகாரில் ஆட்சியைக் கைப்பற்றினால், ஒரு மணி நேரத்தில் மது விலக்கை நீக்குவோம். பூரண மது விலக்கு சட்டத்தால், சட்டவிரோத மது விற்பனை அதிகரித்துள்ளது. இதனால், அரசுக்கு 20 ஆயிரம் கோடி ரூபாய் வரி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. பீகாரில் உள்ள அரசியல்வாதிகள், சட்டவிரோத மதுவிற்பனை மூலம் பயனடைந்து வருகிறார்கள்” என்று பேசியுள்ளார்.

மது

பூரண மது ஒழிப்பை வலியுறுத்திய காந்தியடிகள் பிறந்தநாளன்று கட்சியைத் தொடங்கும் பிரஷாந்த் கிஷோர், மது விலக்கை நீக்குவோம் என அறிவித்திருப்பது பேசுபொருளாகியுள்ளது.