மோடி - பிரகாஷ் ராஜ்  புதிய தலைமுறை
இந்தியா

கன்றுக்குட்டியை கொஞ்சி மகிழ்ந்த பிரதமர் மோடி... பிரகாஷ்ராஜ் போட்ட பதிவு!

PT WEB

பிரதமர் மோடி தனது சமூக வலைதளப்பக்கத்தில் புதிதாகப்பிறந்த கன்றுக்குட்டியுடன் விளையாடுவது போன்ற வீடியோ காட்சிகளை சில தினங்களுக்கு முன்னர் வெளியிட்டிருந்தார். இது சமூக வலைதளங்களில் வைரலானது.

இந்நிலையில், பிரதமர் மோடி, கன்றுக்குட்டியுடன் விளையாடும் காட்சியை பகிர்ந்துள்ள நடிகர் பிரகாஷ்ராஜ், “மணிப்பூர் பற்றி எரிந்துக்கொண்டிருக்கும்போது படப்பிடிப்புக்கு உங்களுக்கு நேரம் கிடைக்கிறதா?” என்று மோடியை நோக்கி கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து அவர் தெரிவித்துள்ளதில், “மணிப்பூர் பற்றி எரிந்து கொண்டிருக்கும் போதும், மாட்டிறைச்சி ஏற்றுமதி மூலம் போதுமான நிதி குவிந்திருக்கும் போதும், இதுபோல் நாள் முழுவதும் படப்பிடிப்பு நடத்த நேரம் கிடைக்கிறது” என கூறியுள்ளார்.

உயிரியல் ரீதியாக பிறக்காத ஒருவர் என்று ஏற்கனவே மோடி பேசியதை தமது பதிவில் அவர் சுட்டிக்காட்டி பதிவிட்டுள்ளார். அதோடு, இதுபற்றி என்ன தோன்றுகிறது மக்களே என்றும் பிரகாஷ்ராஜ் கேள்வி எழுப்பி உள்ளார்.