இந்தியா

ராக்கிங் கொடுமைக்கு எதிராக ஆப்

ராக்கிங் கொடுமைக்கு எதிராக ஆப்

webteam

ராக்கிங் கொடுமைகளுக்கு எதிராக புதிய செல்போன் ஆப் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 

ராகிங் கொடுமைகளை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அந்த வகையில், ராகிங்கில் ஈடுபடுவோர் மீது உடனடி நடவடிக்கைக்கு வழிசெய்யும் வகையில் செல்போன் ஆப் ஒன்றை மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் டெல்லியில் வெளியிட்டார். பின்னர் அவர் கூறும்போது, ராகிங்கை அனுமதிக்கமாட்டோம். ராகிங் கொடுமையை அனுபவிக்கும் மாணவருக்கு இந்த ஆப் பயனுள்ளதாக இருக்கும் என்று தெரிவித்தார். 

ராகிங் கொடுமைக்கு ஆளாகும் மாணவர் இணையதளத்தில் புகார் செய்து பலன் பெறுவதற்கு அதிக நேரம் ஆகும். ஆனால், ஆண்ட்ராய்டு செல்போனில் பதிவிறக்கம் செய்துகொள்ளும் இந்த ஆப் மூலம் உடனடியாக புகார் செய்து நடவடிக்கைக்கு வழிகாணலாம் எனவும் அவர் தெரிவித்தார்.