பிரஜ்வல் ரேவண்ணா எக்ஸ்
இந்தியா

பாலியல் வழக்கு| கைது செய்யப்பட்ட பிரஜ்வல் ரேவண்ணா.. 6 நாட்கள் போலீஸ் காவல்!

Prakash J

கர்நாடகாவில் பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிரஜ்வல் ரேவண்ணா மீது, பல பெண்களுக்கு எதிராக பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். எனினும், பிரஜ்வல் ரேவண்ணா மீது வழக்குப்பதிவு செய்வதற்கு முன்னதாகவே அவர் ஜெர்மனி புறப்பட்டுச் சென்றார். இதுதொடர்பாக சிறப்பு விசாரணைக்குழு அமைத்து கர்நாடகா மாநில போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், (மே.31) ஜெர்மன் நாட்டில் இருந்து விமானம் மூலம் கர்நாடக மாநிலம் பெங்களூரு விமான நிலையத்திற்கு நள்ளிரவு 12.45 மணிக்கு வருகை தந்த பிரஜ்வல் ரேவண்ணாவை விமான நிலைய தொழில் பாதுகாப்பு போலீசார் கைதுசெய்தனர். பின்னர் வழக்கை விசாரிக்கும் கர்நாடக சிறப்பு விசாரணைக் குழு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

இதையும் படிக்க: குழந்தையுடன் இயேசு கிறிஸ்து| ஹர்திக் பாண்டியா மனைவி நடாஷாவின் வைரலாகும் படம்.. ரசிகர்கள் கேள்வி?

இதையடுத்து போலீசார் பிரஜ்வல் ரேவண்ணாவை கைதுசெய்து ரகசிய வழியில் அழைத்துச் சென்றனர். விசாரணை முடிந்த பிறகு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு நீதிபதி முன்பு ஆஜர்படுத்தினர். அவரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளிக்க வேண்டும் என்று சிறப்பு விசாரணைக் குழு போலீசார் தரப்பில் வாதிடப்பட்டது.

15 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரிய நிலையில், 6 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிறப்பு விசாரணைக் குழு போலீசாருக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

இதையும் படிக்க: India Head Coach | தகுதிகள் என்னென்ன? தோனிக்கு ஏன் வாய்ப்பில்லை? கம்பீருக்கு இதனால்தான் வாய்ப்பு!