இந்தியா

யூனியன் பிரதேசங்களில் துணைநிலை ஆளுநருக்கான அதிகாரங்கள் என்ன?

யூனியன் பிரதேசங்களில் துணைநிலை ஆளுநருக்கான அதிகாரங்கள் என்ன?

webteam

டெல்லி, புதுச்சேரி போன்ற யூனியன் பிரதேசங்களில் துணைநிலை ஆளுநருக்கும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கும் இடையே எப்போதும் மோதல் இருந்து வருகிறது.

மற்ற மாநிலங்களில் உள்ளதை விட அதிகமான அதிகாரம் யூனியன் பிரதேச துணை நிலை ஆளுநர்களுக்கு உண்டு. டெல்லி, புதுச்சேரி, அந்தமான் மற்றும் நிகோபர் ஆகிய யூனியன் பிரதேசங்களில் துணைநிலை ஆளுநர் நியமிக்கப்படுவதால் அங்கு அவர்களுக்கான அதிகாரம் உச்சபட்சமாக உள்ளது. இதனால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே மோதல் போக்கு நிலவுகிறது.

அரசியல் சாசனம் 239, 239ஏ, 239 பி ஆகிய பிரிவுகளில் துணை நிலை ஆளுநருக்கான அதிகாரங்கள் விரிவாக விவரிக்கப்பட்டுள்ளன. அதன்படி யூனியன் பிரதேசங்களில் காவல்துறை, சட்டம் ஒழுங்கு, நிலம் உள்ளிட்ட விவகாரங்களில் துணைநிலை ஆளுநரே இறுதி முடிவு எடுக்க முடியும். யூனியன் பிரதேசங்கள் மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் இருப்பதால், பாஜக அரசால் நியமிக்கப்படும் துணை நிலை ஆளுநரே மாநில அரசின் நடவடிக்கைகளில் இறுதி முடிவு எடுக்க முடியும். மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசு ஆட்சி செய்தாலும், நலத்திட்டம், அதிகாரிகள் நியமனம், இடமாற்றம் உள்ளிட்ட விவகாரங்களில் இறுதி முடிவிற்கு துணைநிலை ஆளுநரின் ஒப்புதல் தேவை.