டெல்லி மற்றும் வட இந்தியாவின் சில பகுதிகளில் இன்று பிற்பகல் சத்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 5.7 ரிக்டர் அளவில் பதிவான இந்த நிலநடுக்கம், ஜம்மு & காஷ்மீரில் உள்ள கிஷ்த்வாரில் இருந்து தென்கிழக்கே 30 கிமீ தொலைவில் ஏற்பட்டதாக இந்திய ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தகவின்படி மதியம் 1.33 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. சுமார் 60 கி.மீ ஆழத்தில் இருந்ததாகவும், நிலநடுக்கத்தின் மையம் வட இந்தியாவில் உள்ள பதான்கோட்டில் இருந்து வடக்கே 99 கி.மீ தொலைவில் இருந்ததாக, ஐரோப்பிய-மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்தில் கட்டிடங்கள் குலுங்கியதால் கட்டிடங்கள் மற்றும் வீட்டில் இருந்தவர்கள் உடனடியாக வெளியேறினர். ஸ்ரீ நகரில் கடந்த வாரம் ஏற்பட்ட நிலநடுக்கத்தை விட, இந்த நிலநடுக்கம் அதிக தாக்கத்தை ஏற்படுத்தியதாக உள்ளூர்வாசிகள் தெரிவித்துள்ளனர். ஜூன் 9 அன்று, லடாக் யூனியன் பிரதேசத்தில் 3.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டிருந்தது.
இதேபோல், அதே நாளில் அசாமில் உள்ள தேஜ்பூரில் 3.7 ரிக்டர் அளவில் மற்றொரு நிலநடுக்கம் ஏற்பட்டது. நாடு முழுவதும் நிலநடுக்க நடவடிக்கைகளை கண்காணிக்க இந்திய அரசின் கீழ் நியமிக்கப்பட்ட ஆணையம் NCS செயல்பட்டுவருகிறது. இது இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் பரவியுள்ள மேம்பட்ட தொழில்நுட்பத்துடன் கூடிய 150க்கும் மேற்பட்ட நிலையங்களுடன் தேசிய நில அதிர்வு மையமாக செயல்பட்டுவருகிறது.