இந்தியா

அனைத்து கிராமங்களிலும் 2018 மே1-க்குள் மின்வசதி

அனைத்து கிராமங்களிலும் 2018 மே1-க்குள் மின்வசதி

Rasus

அனைத்து கிராமங்களிலும் 2018-ஆம் ஆண்டு மே 1-ஆம் தேதிக்குள் மின்வசதி ஏற்படுத்தப்படும் என நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.

அவர் தனது பட்ஜெட் உரையில், கிராமப்புற கட்டமைப்பை மேம்படுத்த ரூ. 1,17,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், அனைத்து கிராமங்களிலும் 2018-ஆம் ஆண்டு மே 1-ஆம் தேதிக்குள் மின்வசதி ஏற்படுத்தப்படும் எனவும் தெரிவித்தார். கடந்த ஆண்டில் கிராமப்புற கட்டமைப்பை மேம்படுத்த ரூ.87,765 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்து.

நாடெங்கும் 2019-ஆம் ஆண்டுக்குள் 50,000 கிராம பஞ்சாயத்துகளில் ஏழ்மை முழுதாக நீக்கப்படும் என உறுதியளித்த நிதியமைச்சர், கிராமப்புற பெண்களின் திறன் மேம்பாட்டிற்காக ரூ.500 கோடி சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்திற்கு ரூ.48,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கூறிய அருண் ஜேட்லி, இத்திட்டத்தை கண்காணிக்க விண்வெளி தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும் எனவும் தெரிவித்தார். கடந்த ஆண்டில், 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்திற்கு ரூ.38,500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.