இந்தியாவில் அடுத்து 50 ஆண்டுகளில் வறுமை, ஊட்டச்சத்து பற்றாக்குறை மாதிரியானவை முற்றிலும் அடியோடு ஒழியும் என தெரிவித்துள்ளார் இன்போசிஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் நாராயண மூர்த்தி.
இந்த இலக்கை எட்டுவது அவ்வளவு சுலபம் இல்லை. பல சவால்களுக்கு இடையில் பொறுப்புடன் இந்த இலக்கை அடைய முயற்சிகளை முன்னெடுத்தால் நிச்சயம் வெற்றி பெறலாம் என்றும் தெரிவித்துள்ளார் அவர். கவுகாத்தி ஐஐடி பட்டமளிப்பு விழாவில் இதனை அவர் தெரிவித்துள்ளார்.
“அடுத்து வரும் 50 ஆண்டுகளில் இந்தியா நிச்சயம் வளர்ச்சி அடைந்த ஒரு நாடாக இருக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. அந்த வளர்ச்சி பெற்ற இந்தியாவில் வறுமை, நோய் மற்றும் ஊட்டச்சத்து பற்றாக்குறை மாதிரியானவை அறவே இருக்காது.
இது சாத்தியமடைய வேண்டுமானால் அறிவியல், தொழில்நுட்பம், மருத்துவம் மாதிரியானவற்றில் இந்தியா முன்னோடியாக திகழ வேண்டும். அதோடு திறமையான நிர்வாக ஆளுமை பண்பு கொண்டவர்களும் இதற்கு அவசியம்” என அவர் தெரிவித்துள்ளார்.
வெர்ச்சுவல் முறையில் நடைபெற்ற இந்த பட்டமளிப்பு விழாவில் அவர் தலைமை விருந்தினராக பங்கேற்று பேசிய உரையில் இதனை அவர் தெரிவித்துள்ளார்.