இந்தியா

மாநிலங்களவையிலும் நிறைவேறியது வேளாண் மசோதாக்கள்..!

மாநிலங்களவையிலும் நிறைவேறியது வேளாண் மசோதாக்கள்..!

JustinDurai

விவசாய மசோதாக்களுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டதால் மாநிலங்களவை ஒத்திவைக்கப்பட்டது. அதன்பின் அவை மீண்டும் கூடியபோது எதிர்ப்புக்கு மத்தியில் குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதாக்கள் நிறைவேறியது.

எதிர்க்கட்சி எம்.பி.களின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில், மாநிலங்களவையில் இன்று 2 வேளாண் மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

விவசாய விளைபொருள் வர்த்தக மசோதா மற்றும் விவசாயிகளின் விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா ஆகிய மசோதாக்களை வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தாக்கல் செய்தார்.

இந்த விவசாய மசோதாக்கள் மீதான விவாதத்திற்கு பதிலளிப்பதை ஒத்திவைக்கக் கோரி எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டன. எதிர்க்கட்சிகளின் கோரிக்கைகள் குரல் வாக்கெடுப்பு மூலம் நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கடும் அமளியில் ஈடுபட்டதால் மாநிலங்களவை ஒத்திவைக்கப்பட்டது. அதன்பின்னர் அவை கூடியபோது வேளாண் மசோதாக்கள் மாநிலங்களவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது. இதனையடுத்து மாநிலங்களவை ஒத்திவைக்கப்பட்டது.