தபால் வங்கி கணக்கு முகநூல்
இந்தியா

கர்நாடகா | தபால் நிலையங்களில் கணக்கு தொடங்க ஆர்வம் காட்டும் பெண்கள்!

ஜெனிட்டா ரோஸ்லின், PT WEB

செய்தியாளர்:ஜெகன்நாத்

மக்களவை தேர்தலில் வெற்றிபெரும் பட்சத்தில், ஏழை பெண்களுக்கு ஆண்டுதோறும் ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்படும் என காங்கிரஸ் வாக்குறுதி அளித்திருந்தது. மக்களவை தேர்தல் இறுதிக்கட்டத்தை எட்டி இருக்கும் சூழலில், கர்நாடக மாநிலம் முழுவதும், தபால் நிலைய கணக்கு தொடங்க பெண்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

கர்நாடகா - தபால் நிலையத்தில் குவியும் பெண்கள்

அதிகாலை 4 மணிக்கே வரிசையில் காத்திருந்து தபால் நிலையங்களில் பெண்கள் கணக்கு தொடங்குகின்றனர். இதன் காரணமாக வழக்கமான பணிகள் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கும் தபால் நிலைய அதிகாரிகள், பெண்கள் கணக்கு தொடங்குவதற்காக தனி கவுண்ட்டர் அமைக்கப்பட்டு உள்ளதாகவும் கூறினர்.

கர்நாடகாவில் கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சிக்கு வந்த காங்கிரஸ், மகளிருக்கு மாதந்தோறும் 2000 ரூபாய் வழங்குவது, இலவச பேருந்து பயணம் உள்ளிட்ட திட்டங்களை உடனடியாக நிறைவேற்றியது குறிப்பிடத்தக்கது.