RG Kar மருத்துவக்கல்லூரி முன்னாள் முதல்வர் முகநூல்
இந்தியா

கொல்கத்தா | Ex-Dean உட்பட 6 பேருக்கு உண்மை கண்டறியும் சோதனை! அவிழ்க்கப்படுமா மர்ம முடிச்சுகள்..?

RG Kar மருத்துவக்கல்லூரி முன்னாள் முதல்வர் உட்பட 6 பேருக்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்த கொல்கத்தா உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

PT WEB

கொல்கத்தா RG Kar மருத்துவக்கல்லூரி முன்னாள் முதல்வர் உட்பட 6 பேருக்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்த கொல்கத்தா உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இதற்கிடையில் உச்சநீதிமன்றத்தின் அறிவுறுத்தலை ஏற்று மருத்துவர்கள் பணிக்கு திரும்பத் தொடங்கியுள்ளனர்.

உச்ச நீதிமன்றம் - கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை வழக்கு

மருத்துவர்கள் பணியிட பாதுகாப்பு குறித்த உச்சநீதிமன்றத்தின் உறுதிமொழியை ஏற்று வேலைநிறுத்தத்தை திரும்பப் பெறுவதாக டெல்லியில் உள்ள எய்ம்ஸ், ஆர்.எம்.எல் மருத்துவமனை உள்ளிட்ட மருத்துவமனை மருத்துவர்கள் அறிவித்துள்ளனர்.

முன்னதாக மேற்கு வங்க பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை கொலைக்கு நீதி கேட்டும் பணியிட பாதுகாப்பு கோரியும் மருத்துவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இந்த நிலையில் மருத்துவர்கள் பணிக்கு திரும்பவேண்டும் என உச்சநீதிமன்றம் கேட்டுக்கொண்டது. மருத்துவர்கள் பணிக்கு திரும்பிய பின்னர் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது எனவும் நீதிமன்றம் உறுதியளித்தது. இதைத் தொடர்ந்து போராட்டத்தை திரும்பப் பெறுவதாக எய்ம்ஸ் உள்ளிட்ட மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.