ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவையின் 20 தொகுதிகளுக்கு இன்று 2ஆம் கட்ட தேர்தல் நடைபெறுகிறது.
ஜார்க்கண்ட் மாநில சட்டப் பேரவையில் மொத்தம் உள்ள 81 தொகுதிகளுக்கு ஐந்து கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. கடந்த மாதம் 30ஆம் தேதி, 13 தொகுதிகளுக்கு முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து 20 தொகுதிகளுக்கு இரண்டாம் கட்டத் தேர்தல் இன்று தொடங்கியுள்ளது.
ஜாம்ஷெட்பூர் கிழக்கு மற்றும் மேற்கு தொகுதிகளில் மட்டும் காலை 7மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5மணி வரை தேர்தல் நடைபெறுகிறது. இதர 18 தொகுதிகளில் மாலை 3 மணி வரை தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நக்சல் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் பாதுகாப்பு பணியில் 42 ஆயிரம் பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாக்குகள் எண்ணும் பணி டிசம்பர் 23ஆம் தேதி நடைபெற உள்ளது. ஜார்க்கண்டில் ஆளும் பாஜக முதன் முறையாக கூட்டணி அமைக்காமல் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.