கைத்தறி உற்பத்தியாளார் புதிய தலைமுறை
இந்தியா

பொள்ளாச்சி | ”அவங்களும் இதையே செய்றாங்க” - மாற்றுத் தொழிலை நோக்கி நகரும் நெசவாளர்கள்.. பின்னணி என்ன?

கைத்தறி ரகங்களை விசைதரியில் நெய்வதை தடுக்க வேண்டும். விசைத்தறி சேலைகளை கைத்தறி சேலைகள் என ஏமாற்றி பொதுமக்களிடம் விற்பனை செய்து வருகின்றனர்.

PT WEB

பொள்ளாச்சியில் கைத்தரி நெசவு நலிவடைந்துவரும் நிலையில், நெசவாளர்கள் மாற்றுத் தொழிலை நோக்கி நகரும் நிலைக்கு உள்ளாகி இருக்கின்றனர்.

பொள்ளாச்சி சுற்றி உள்ள நெகமம், குள்ளக்காபாளையம், ஜலத்தூர், துறையூர், சமத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் ஒரு லட்சம் தொழிலாளர்கள் நேர்முகமாகவும் மறைமுகமாகவும் கைத்தறி நெசவு தொழிலை நம்பி இருந்தனர்.

கைத்தறி தொழிலில் சார்ந்து நூலுக்கு சாயம் போடுவது, சீலைக்கு ரகம் சேர்ப்பது, ஜக்கார்டு அட்டை அமைப்பது., போன்ற தொழிலில் பல்லாயிரம் பேர் வேலை செய்து வந்தனர்.

கைத்தறி நெசவு செய்யும் தொழிலாளர்களுக்கு பிரத்யேகமாக ஒதுக்கப்பட்ட காட்டன், பட்டு, கோரா வகை சேலை ரகங்களை தற்போது விசைத்தறி நெசவாளர்கள் நெய்வதால் வேலை இழப்பு ஏற்பட்டு சுமார் 50,000 பேர் இந்த தொழிலை விட்டு கட்டிட வேலை, ஓட்டுநர், திருமண மண்டபங்களில் வேலை என கிடைத்த தொழில்கள் செய்து ஜீவனம் செய்து வருவதாகவும், கைத்தறி ரக ஒதுக்கீட்டு சட்டம் சொன்னது போல இங்கும் யாரும் செயல்படுவதில்லை... சட்டங்கள் கடுமையக்கப்பட வேண்டும் கைத்தறி ரகங்களை விசைதரியில் நெய்வதை தடுக்க வேண்டும். விசைத்தறி சேலைகளை கைத்தறி சேலைகள் என ஏமாற்றி பொதுமக்களிடம் விற்பனை செய்து வருகின்றனர். அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் தங்களை வஞ்சிப்பதாக நெசவாளர்கள் வேதனை தெரிவித்தனர்.

மேலும், “பட்டு மற்றும் நூல் விலை ஏற்ற இறக்கம் GST வரி விதிப்பு போன்றவற்றை எங்கள் தொழிலுக்கு பெரும் சவாலாக உள்ளது.

தனியார் நிறுவனங்களிடம் நூலை பெற்று நெசவு தொழில் செய்பவர்களை கணக்கெடுத்து. அவர்களுக்கென ஒரு அடையாள அட்டை வழங்கி வங்கிகள் மூலம் நிதி உதவி வழங்கி தொழிலை மேம்படுத்த உதவ வேண்டும். தற்போது இந்த தொழில் நலிவடைந்து உள்ளதால் வட்டிக்கு கடன் பெற்று குடும்பத்தை நடத்தும் சூழல் உருவாகி உள்ளது.

மாதம் சுமார் 20,000 வரை வருமானம் ஈட்டி வந்த சூழல் மாறி நூல் விலை உயர்வால் வரத்து குறைந்து வாரம் இரண்டு சேலை நெய்வதற்கு கிடைப்பதே இங்கு கேள்விக்குறியாக உள்ளது.

கடந்த 15ஆண்டுகளுக்கு முன்பு அரசால் வழங்கப்பட்ட அடையாள அட்டை கூட புதுப்பிக்கப்படவில்லை. இதனால் எந்த வங்கியிலும் எங்களுக்கு கடன் வழங்க முன்வருவதில்லை. எங்கள் சமூக இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் அரசால் கைத்தறி நெசவு பயிற்சி கூடங்கள் அமைத்து எங்கள் தொழிலை அழிவின் விளிம்பில் இருந்து காக்க மத்திய மாநில அரசுகள் வழிவகை செய்ய வேண்டும்.

இனியும் எங்கள் நிலையை மத்திய மாநில அரசு கண்டுகொள்ளவில்லை என்றால் எங்கள் தலைமுறையோடு இந்த கைத்தறி தொழில் அழிந்துவிடும்” என்று நெசவாளர்கள் வேதனை தெரிவித்தனர்