இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தற்போதைய தலைவருமான சவுரவ் கங்குலி கடந்த சனிக்கிழமை அன்று நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சையும் கொடுத்திருந்தனர். இந்நிலையில் அவரது உடல் நலம் குன்ற காரணமே அரசியல் தலைவர்கள் அவருக்கு கொடுத்த அழுத்தம் தான் கரணம் என தெரிவித்துள்ளார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த அஷோக் பட்டாச்சார்யா.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சவுரவ் கங்குலியை பார்த்துவிட்டு திரும்பிய நிலையில் அஷோக் பட்டாச்சார்யா இதை பத்திரிகையில் தெரிவித்துள்ளார்.
“கங்குலிக்கு அரசியலில் பெரிய அனுபவம் கிடையாது. அதனால் அவருக்கு கொடுக்கப்பட்ட அழுத்தங்களே இந்த உடல்நலக் குறைவிற்கு காரணம். மருத்துவமனையில் அவரை சந்தித்த போது அரசியல் வேண்டாம் என்றேன். அவரும் அமைதியாக அதை கேட்டுக்கொண்டார்” என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் அவரது கருத்துகளை வன்மையாக கண்டித்துள்ளார் மேற்குவங்க பாஜக தலைவர் திலீப் கோஷ். மேலும் கங்குலி விரைவில் குணம் பெற இறைவனை வேண்டிக் கோல்கவதாகவும் அவர் தெரித்துள்ளார்.