இந்தியா

சொகுசு விடுதியில் எம்.எல்.ஏ.க்கள்: உச்சக்கட்ட அரசியல் குழப்பத்தில் கர்நாடகா!

சொகுசு விடுதியில் எம்.எல்.ஏ.க்கள்: உச்சக்கட்ட அரசியல் குழப்பத்தில் கர்நாடகா!

webteam

கர்நாடகாவில் ஆளும் மதசார்பற்ற ஜனதா தள கட்சி எம்எல்ஏக்கள் அவசர கூட்டம் இன்று நடைபெறலாம் என தகவல் வெளியாகியுள்ளது. 

ஆளும் காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தள கட்சியின் 13 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்துள்ள நிலையில் முதலமைச்சர் குமாரசாமி தலைமையிலான அரசு கவிழும் அபாயத்தில் உள்ளது. இதன் எதிரொலியாக கட்சியில் இருக்கும் பிற எம்எல்ஏக்களுடனான கூட்டத்தை மதசார்பற்ற ஜனதாதள கட்சி கூட்டுகிறது.

அமெரிக்கா சென்றுள்ள கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி இன்று திரும்புவார் என எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்தக் கூட்டம் நடைபெறுகிறது. இதனிடையே ராஜினாமா செய்த எம்எல்ஏக்களில் 10 பேர் மும்பை சொகுசு விடுதியில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தத் தகவல் குறித்து தங்களுக்கு எதுவும் தெரியாது என மகாராஷ்டிர பாஜக திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. 

கர்நாடகாவில் நிலவும் அரசியல் குழப்பத்தின் பின்னணியில் பாரதிய ஜனதா இருப்பதாக காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றஞ்சாட்டியுள்ளார்.