இந்தியா

பாலியல் வன்கொடுமையால் கர்ப்பமான ஆதரவற்ற பெண்... ரத்ததானம் செய்த போலீஸார்.!

பாலியல் வன்கொடுமையால் கர்ப்பமான ஆதரவற்ற பெண்... ரத்ததானம் செய்த போலீஸார்.!

Sinekadhara

20 வயது பெண்ணை 8 மாதங்களாக பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தி, திருமணம் செய்துகொள்வதாகவும், வேலை வாங்கித் தருவதாகவும் ஜார்கண்டிலிருந்து டெல்லிக்கு கூட்டி வந்திருக்கிறார் ஒரு இளைஞர். அந்த பெண் ஒன்பது மாத கர்ப்பமாக இருந்தபோது வாடகைவீட்டில் அந்தப் பெண்ணை தனியாக தவிக்க விட்டுவிட்டு, ஜார்கண்டிற்கு சென்று தலைமறைவாகி விட்டார்.

தகவல் அறிந்து செப்டம்பர் 1ஆம் தேதி இந்தப் பெண்ணை மீட்கவந்த போலீஸார் அந்த பெண்ணின் மோசமான நிலைமையைப் பார்த்து அவருக்கு உதவியிருக்கின்றனர். அவரை எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்த்திருக்கின்றனர். அங்கு அவசரமாக அவருக்கு ரத்தம் தேவைப்படுகிறது என மருத்துவர்கள் கூறியிருக்கின்றனர். அவருக்கு ஃபதேஹ்புர் பேரி காவல்நிலைய போலீசார் யோகேஷ்,ராகுல் மற்றும் சந்தீப் 3 பேரும் தாமாக முன்வந்து ரத்ததானம் செய்திருக்கின்றனர்.

இதனால் உயிர்பிழைத்த அந்தப் பெண்ணுக்கு செப்டம்பர் 19ஆம் தேதி ஆரோக்யமான பெண் குழந்தை பிறந்துள்ளது.

அந்த பெண் கொடுத்த புகாரின்பேரில், சட்டப்பிரிவுகள் 376(பாலியல் வன்கொடுமை) மற்றும் 506 (குற்றத்தண்டனை)இன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜார்கண்டில் அவரது லொகேஷனை ட்ரேஸ் செய்துவருவதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.