இந்தியா

வெளிமாநில தொழிலாளர்களின் போராட்டத்தில் தடியடி: வீடியோ!

வெளிமாநில தொழிலாளர்களின் போராட்டத்தில் தடியடி: வீடியோ!

webteam

சொந்த ஊருக்கு அனுப்பிவைக்க வேண்டுமென போராட்டத்தில் ஈடுபட்ட வெளிமாநில தொழிலாளர்கள் மீது ஆந்திர போலீசார் தடியடி நடத்தினர்.

நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள பொது ஊரடங்கு காரணமாக புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தாங்கள் வேலை செய்த பகுதிகளிலே இருந்து வந்தனர். சிலர் கால்நடையாகவே பல நூறு கிலோமீட்டர் பயணம் செய்து சொந்த மாநிலங்களுக்கு சென்றடைந்தனர். இருப்பினும், பெரும்பாலானோர் வேலைக்கு சென்ற மாநிலங்களிலேயே தங்கி வந்தனர். சரியான உணவு கிடைக்கவில்லை என்று சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க வேண்டியும் பல மாநிலங்களில் போராட்டங்களும் நடைபெற்றன.

இந்நிலையில் சொந்த ஊருக்கு அனுப்பிவைக்க வேண்டுமென போராட்டத்தில் ஈடுபட்ட வெளிமாநில தொழிலாளர்கள் மீது ஆந்திர போலீசார் தடியடி நடத்தினர். ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி பகுதியின் கொவ்வருவில் வெளிமாநில தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்களை சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்க வேண்டுமென்ற கோரிக்கையுடன் போராட்டம் நடத்தப்பட்டது.

போராட்டத்திற்கு அனுமதி இல்லையென்பதால் கூட்டத்தை கலைக்க போலீசார் முயற்சி செய்தனர். ஆனால் போலீசார் மீது கற்கள்வீசி தாக்குதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து தடியடி நடத்திய போலீசார், கூட்டத்தை கலைத்தனர்