விவசாயிகளின் டிராக்டர் பேரணியில் வன்முறை ஏற்பட்டதை அடுத்து தலைநகர் டெல்லி முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே வன்முறையை கட்டுக்குள் கொண்டுவரும் பொருட்டும், போராட்டப் பகுதியில் இருந்து தவறான தகவல்கள் பரப்பப்படுவதாகவும் போலீசார் கூறியதை அடுத்து அங்கு இணைய வசதி துண்டிக்கப்பட்டது.
இதனால் டெல்லியில் ’க்ரே லைன்’ என்று சொல்லக்கூடிய மெட்ரோ ரயில் சேவை மூடப்படுவதாக அந்நிர்வாகம் தெரிவித்துள்ளது. செங்கோட்டையை விவசாயிகள் முற்றுகையிட்டதால், குடியரசுத் தலைவர் மாளிகை மற்றும் நாடளுமன்ற கட்டடம், பிரதமர் இல்லம், உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றம் போன்ற இடங்களில் பலகட்ட பாதுகாப்புகளுடன் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
அதேபோல் விமான நிலையம், ரயில் நிலையம், பேருந்து நிலையம் போன்ற இடங்களிலும் பாதுகாப்பு கருதி போலீஸார் அதிகளவில் குவிக்கப்பட்டுள்ளனர். டெல்லியின் முக்கிய சாலைகளும் மூடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.