இந்தியா

வேலைவாய்ப்பு கேட்டு இளைஞர்கள் பேரணி - போலீஸ் தடியடி நடத்தியதால் வன்முறை

வேலைவாய்ப்பு கேட்டு இளைஞர்கள் பேரணி - போலீஸ் தடியடி நடத்தியதால் வன்முறை

webteam

மேற்குவங்க மாநிலம் ஹவுராவில் வேலை‌வாய்ப்பு கேட்டு இடதுசாரி அமைப்பினர் நடத்திய அமைதி பேரணியை காவல்துறையினர் கலைக்க முயன்றதால் இருதரப்புக்கும் இடையே மோதல் வெடித்தது.

இந்திய மாணவர் அமைப்பினர் மற்றும் இந்திய ஜனநாயக இளைஞர் அமைப்பினர் இணைந்து சிங்கூரில் இருந்து, தலைமைச் செயலகம் நோக்கி வேலைவாய்ப்பு கேட்டு அமைதி பேரணி நட‌த்த‌னர். ஹவுரா அருகே அவர்களை தடுத்து நிறுத்திய காவல்துறையினர் திடீரென தடியடி நடத்தி அவர்களை கலைக்க முயன்றனர்.

இதனால், பதிலுக்கு போராட்டக்காரர்களும் சண்டையிட முயன்றதால், அங்கு பதற்றம் ஏற்பட்டது. இதையடுத்து, தண்ணீரை பீய்ச்சி அடித்தும், கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியும் காவல்துறையினர் அவர்களை கலைத்தனர். இதனால் அப்பகுதியே போர்க்களம் போல காட்சியளித்தது.

வேலைவாய்ப்பு கேட்டு அமைதியான முறையில் பேரணி நடத்தியவர்கள் மீது காவல்துறையினர் அராஜகமாக நடந்து கொண்டது கண்டிக்கத்தக்கது என இடதுசாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர்