இந்தியா

எல்லை தாண்டிய சிறுவனுக்கு ஸ்வீட் கொடுத்து அனுப்பிய இந்திய ராணுவம்!

எல்லை தாண்டிய சிறுவனுக்கு ஸ்வீட் கொடுத்து அனுப்பிய இந்திய ராணுவம்!

webteam

ஜம்மு காஷ்மீரில் எல்லை தாண்டி வந்துவிட்ட சிறுவனுக்கு ஸ்வீட் கொடுத்து திருப்பி அனுப்பிய நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீரில் இருந்து கடந்த 24-ம் தேதி, முகமது அப்துல்லா என்ற 11 வயது சிறுவன் இந்திய எல்லைக்குள் வந்துவிட்டான். பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள தேக்வார் பகுதியின் காட்டுப் பகுதியில் அவன் வழி தவறி வந்தது தெரிய வந்தது.

இதையடுத்து அவன் காஷ்மீர் போலீசில் ஒப்படைக்கப்பட்டான். இதையடுத்து எல்லை தாண்டி வந்தால் கைதுசெய்யப்படுவது வழக்கம். ஆனால், சிறுவன் என்பதாலும் வழி தவறி வந்ததாலும் அவனை திரும்ப ஒப்படைக்க முடிவு செய்தனர். இதையடுத்து அவனைத் திருப்பி அனுப்புவதற்கான நடைமுறைகளை மேற்கொண்டனர். நான்கு நாட்களுக்குப் பிறகு அவனுக்கு புது உடை கள் மற்றும் ஸ்வீட் பாக்ஸ் கொடுத்து, இந்திய ராணுவத்தினர் எல்லைப் பகுதிக்கு அழைத்துச் சென்று பாகிஸ்தான் ராணுவத்திடம் ஒப்படைத்தனர்.