இந்தியா

இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் அறிமுகமானது போக்கோ M3!

EllusamyKarthik

இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் போக்கோ M3 போன் அறிமுகமாகியுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் இந்த போன் விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் என போக்கோ நிறுவனம் தெரிவித்திருந்த நிலையில் இன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் கடந்த நவம்பர் மாதம் அறிமுகமாகியிருந்த இந்த போன் இந்தியாவில் இப்போது தான் அறிமுகமாகி உள்ளது. 

ஸ்நாப்டிராகன் 662 சிப்செட், 48 மெகா பிக்சலுடன் கூடிய ட்ரிபிள் கேமிரா, ஃபுள் HD+ டிஸ்பிளே, 6000 மில்லியாம்ப் திறன் கொண்ட பேட்டரி, கார்னிங் கொரில்லா கிளாஸ் 3, 18 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் உள்ளிட்ட சிறப்பம்சங்கள் உள்ளன. வரும் பிப்ரவரி 9 ஆம் தேதி முதல் இந்த போனை இந்தியாவில் விற்பனை செய்ய உள்ளது போக்கோ நிறுவனம். 

6 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி UFS 2.1 ஸ்டோரேஜ் அல்லது 128 ஜிபி UFS 2.1 ஸ்டோரேஜ் என இரண்டு வேரியெட்களாக இந்த போன் இந்தியாவில் அறிமுகம் ஆகியுள்ளது. சர்வதேச சந்தையில் 4 ஜிபி ரேம் கொண்ட போன்கள் விற்பனையாகி வரும் நிலையில் இந்தியாவில் 4 ஜிபி ரேம் போன்கள் அறிமுகமாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.